உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீடு முன் நிறுத்தியிருந்த 2 மொபட் எரிந்து நாசம்

வீடு முன் நிறுத்தியிருந்த 2 மொபட் எரிந்து நாசம்

வீடு முன் நிறுத்தியிருந்த2 மொபட் எரிந்து நாசம்சேலம், அக். 10-சேலம், நரசோதிப்பட்டி, பெருமாள் மலை அடிவாரத்தை சேர்ந்தவர் சுமன், 38. மேச்சேரியில் உள்ள, இரும்பு கம்பெனியில் பணிபுரிகிறார். அவரது வீடு முன் நேற்று முன்தினம், ஐூபிட்டர், ஸ்கூட்டி பெப் மொபட்டுகள் நிறுத்தப்பட்டிருந்தன. நள்ளிரவு, 12:00 மணிக்கு, இரு மொபட்டுகளும் தீப்பிடித்து எரிந்தன. சுமன் உள்ளிட்ட குடும்பத்தினர் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். ஆனால் இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்தது. சுமன் புகார்படி, சூரமங்கலம் போலீசார், மின்கசிவால் ஏற்பட்டதா, யாரேனும் தீ வைத்தனரா என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ