சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை, பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளி வியாபாரி சங்கர், 47. கடந்த 2ல், அதே பகுதியில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்து சங்கரின் தங்கை கணவரான, சின்னபுதுாரை சேர்ந்த வெள்ளி வியாபாரி சுபாஷ்பாபு, 47, என்பவரை கைது செய்தனர். குடும்ப பகையில் அவர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிந்தது. அவரது வாக்குமூலப்படி கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த, தி.மு.க., நிர்வாகி அப்துல் முனாப், 30, ரவுடி பாஸ்கரின் இரட்டை சகோதரிகளான அழகாபுரம் காட்டூர் கீதா, 42, லதா, 42, உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கடந்த, 22ல், சேலம் நீதிமன்றத்தில் பாஸ்கர் சரணடைந்தார்.நேற்று, ஓசூர், தளி ரோடு, பூனைப்பள்ளியை சேர்ந்த திருவேங்கடம், 32, சந்துரு, 29, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொலையாளிகளுக்கு தஞ்சம் கொடுத்து, உடந்தையாக இருந்தவர்கள். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சங்கர் கொலை வழக்கில் இதுவரை, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் காரை ஓட்டி கொன்ற, ரவுடி பாஸ்கரின் தம்பி ராஜாவை தேடுகிறோம்' என்றனர்.