உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

2 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

சேலம்: சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிவதாபுரம் மாரியம்மன் கோவில் அரு‍கே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 2 டன் ரேஷன் அரிசி கடத்தி கொண்டு வரப்பட்டது தெரிந்தது. விசாரணைக்கு பின், சரக்கு வாகன டிரைவரான, நெத்திமேட்டை சேர்ந்த ராஜா, 28, கிச்சிப்பாளையம் வெங்கடேஷ், 38, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் சரக்கு வாகனம், ஸ்விப்ட் டிசையர் கார், 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். வெங்கடேஷ், நாமக்கல், புதன்சந்தை பகுதியில் கால்நடை தீவன தானிய ஆலை நடத்துவதும், அங்கு ரேஷன் அரிசி கடத்துவதும் தெரிந்தது. இவர்களை தவிர கடத்தலில் தொடர்புடைய, மேலும் இருவரை, போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை