உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.3 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை தாய்மாமன் உள்பட 2 பேருக்கு காப்பு

ரூ.3 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை தாய்மாமன் உள்பட 2 பேருக்கு காப்பு

சேலம், ஜன. 26-சேலம், அன்னதானப்பட்டி, மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுப்ரமணியம் மகள் பானுப்பிரியா, 37. இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கணவரை பிரிந்து தந்தை வீட்டில் இருந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவ-ருக்கு, கடந்த, 6ல், சேலம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை விற்றதாக, 'சைல்டு லைன்' அமைப்புக்கு தகவல் கிடைத்தது. உடனே சமூக நலத்துறை அலு-வலர்கள், சம்பவ இடம் சென்று விசாரித்ததில், குழந்தையை விற்றது உறுதி-யாக, அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் பரவாசுதேவன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்தனர். அதில் பானுப்பிரியா மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்-தையை பராமரிப்பது குறித்து, பெற்றோர் தவித்தது தெரிந்தது. இதனால் பானுப்பிரியாவின் தம்பியும், குழந்தையின் தாய்மாம-னுமான ரமேஷ், குழந்தையை தெரிந்தவர்களிடம் கொடுத்துவி-டலாம் என கூறியுள்ளார். பின் ரமேஷ், லீபஜாரில் மளிகை கடை நடத்தும் ராஜாவிடம், 3.20 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்-றுள்ளார். அதில், 1.20 லட்சம் ரூபாயை மட்டும், ரமேஷ் பெற்-றோரிடம் கொடுத்துள்ளார்.இந்நிலையில் ராஜா, நேற்று முன்தினம், வக்கீல் மூலம் குழந்-தையை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். அவர்கள், சமூக நலத்துறை அதிகாரிகளிடம் குழந்தையை ஒப்படைத்தனர். இதை-யடுத்து குழந்தையை விற்ற ரமேஷ், வாங்கிய ராஜாவை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை