உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டில் பதுக்கிய 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஆத்துார், : ஆத்துாரில், வீட்டினுள் பதுக்கி வைத்திருந்த, 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை போலீசார் கைது செய்தனர்.ஆத்துார், ராணிப்பேட்டை பகுதியில் வீட்டினுள் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக, சேலம் எஸ்.பி., கவுதம்கோயலுக்கு புகார் சென்றது. அவரது உத்தரவின்படி நேற்று, ஆத்துார் டவுன் போலீசார், ராணிப்பேட்டை பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, ராணிப்பேட்டை சிவாஜி தெருவை சேர்ந்த கணேசன், 53, என்பவரது வீட்டினுள், 13 மூட்டைகளில் இருந்த, 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (ஹான்ஸ், விமல் பாக்கு, கூல் லிப்) பறிமுதல் செய்தனர். வீட்டினுள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த கணேசனை, ஆத்துார் டவுன் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பெங்களூருவில் இருந்து வாங்கி வந்ததாகவும், அங்குள்ள வியாபாரி கூறும் இடத்திற்கு சென்று விற்பனை செய்வதாகவும், போலீசாரிடம் கூறினார். புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் மொத்த வியாபாரி குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.அமைதியான


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை