உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 மாதங்களில் 22,000 ஆடியோ பதிவு: சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

2 மாதங்களில் 22,000 ஆடியோ பதிவு: சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

வீரபாண்டி: இளம்பிள்ளை அருகே ரெட்டிமணியாக்காரனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், கடந்தாண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை, இணைய வழி, 'கல்வி வானொலி'யில் பாடங்கள் தொடர்பாக, 22,453 ஆடியோக்களை பதிவு செய்து சாதனை படைத்தனர். இதை, 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்' நிறுவனம், உலக சாதனையாக அங்கீகரித்து, அவர்கள் புத்தகத்தில் இடம்பெற்றது. இதனால் அதற்கு காரணமான மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நேற்று நடந்தது. அதில் சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், உலக சாதனை சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி பாராட்டினார்.ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவன பிரதிநிதி வெங்கடேசன் பேசுகையில், ''ஒரே பள்ளியில் படிக்கும், 344 மாணவர்கள் மட்டுமே, 2 மாதங்களில், 22,453 ஆடியோக்களை பதிவு செய்துள்ளது மிகப்பெரிய சாதனை. இதற்கு ஊக்கமளித்து வழிகாட்டிய அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பாராட்டுகள்,'' என்றார். தலைமையாசிரியை மல்லிகா, ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ