ஓடும் பஸ்சில் 2.5 பவுன் திருட்டு
சேலம்: சேலம், கந்தம்பட்டி, ஹவுசிங் போர்டை சேர்ந்த, செந்தில்குமார் மனைவி சந்திரா, 40. இவர், கந்தம்பட்டியில் இருந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்ல, அரசு டவுன் பஸ்சில் நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு பயணித்தார். மூலப்பிள்-ளையார் கோவில் அருகே வந்தபோது, அவர் அணிந்திருந்த, 2.5 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.மயில் மீட்புஓமலுார்: ஓமலுார், அம்மன்கோவில்பட்டியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. 50 அடி ஆழ கிணற்றில், நேற்று காலை மயில் தவறி விழுந்தது. ஓமலுார் தீயணைப்புத்துறையினர் வந்து கிணற்றில் இறங்கி மயிலை மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்ததால், கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்-பட்டது. சிகிச்சைக்கு பின் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்-பட்டு, காட்டு ப்பகுதியில் விடப்பட்டது.