உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநில கலைத்திருவிழா போட்டி முதல் நாளில் 2,875 பேர் பங்கேற்பு

மாநில கலைத்திருவிழா போட்டி முதல் நாளில் 2,875 பேர் பங்கேற்பு

ஓமலுார், பள்ளி கல்வித்துறை சார்பில், 'பசுமையும் பாரம்பரியம்' மைய கருத்தை அடிப்படையாக வைத்து, அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு இரு நாள் போட்டி, ஓமலுார் அருகே உள்ள பத்மவாணி கல்லுாரியில் நேற்று தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில ஆலோசகர் ஜனார்த்தனன் தொடங்கி வைத்தனர்.முதல் நாளில், அரசு பள்ளிகளில் இருந்து, 2,875 மாணவ, மாணவியர், கவின் கலை, நுண்கலை, இசை, கருவி இசை, நடனம், நாடகம் என, 34 வகை போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தினர். ஆசிரியர்கள் வீடியோ, போட்டோ மூலம் பதிவு செய்தனர். அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இன்று அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 2,263 மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்