உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாமகிரிப்பேட்டை அருகே பஸ்- - லாரி மோதியதில் 3 பேர் பலி

நாமகிரிப்பேட்டை அருகே பஸ்- - லாரி மோதியதில் 3 பேர் பலி

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் டிரைவர்கள் உள்பட, 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்துாரில் இருந்து, 'சக்திவேல்' என்ற தனியார் பஸ், 50க்கும் மேற்பட்ட பயணி-களை ஏற்றிக்கொண்டு, நேற்று மாலை, 7:00 மணிக்கு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நோக்கி புறப்பட்டது. பஸ்சை முருங்கப்பட்டியை சேர்ந்த டிரைவர் ரவிக்குமார், 55, ஓட்டினார். நாமகிரிப்பேட்டை அருகே, மெட்டாலா அடுத்த கோரையாறு பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, பாலத்திற்கு முன் வலைவான சாலையில் திரும்பும்போது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரி, பஸ்சின் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கிய பஸ் டிரைவர் ரவிக்குமார், பஸ்சில் பயணம் செய்த புதுப்பட்டியை சேர்ந்த அலமேலு, 55, லாரி டிரைவர் அநேகன், 55, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், பஸ்சில் பயணம் செய்த, ஒடுவன் குறிச்சியை சேர்ந்த மணிவண்ணன் மனைவி வனிதா, 36, ராசி-புரம் அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த கோவிந்தன் மனைவி திலகவதி, கோனேரிப்பட்டியை சேர்ந்த பூபதி மனைவி ஜெய்சித்ரா, 41, அருண் மனைவி திவ்யா, 23, கட்டநாச்சினம்பட்டியை சேர்ந்த செல்வம் மகள் சவுமியா, 22, பழனிவேல் மனைவி மலர், 50, மணி மனைவி செல்வி, 49, ஆத்துாரை சேர்ந்த ராமர் மனைவி கவிதா, 26, ராமலிங்கம் மனைவி மல்லிகா, 52 உள்பட, 17க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்-தனர். டி.எஸ்.பி., விஜயகுமார், நாமகிரிப்பேட்டை போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு, படுகாயடைந்தவர்களை, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த விபத்தால், ஆத்துார் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, 3 கிலோ மீட்டர் துாரத்-திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ராசிபுரத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மதி-வேந்தன், கலெக்டர் உமா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை