உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரேஷன் விற்பனையாளரிடம்பணம் பறித்த 4 பேர் கைது

ரேஷன் விற்பனையாளரிடம்பணம் பறித்த 4 பேர் கைது

சேலம், சேலம், கல்லாங்குத்துார், அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் மயில்வேல், 41. ரேஷன் கடை விற்பனையாளரான இவர், நேற்று முன்தினம் மதியம், சங்கர் நகர் வன பத்ரகாளியம்மன் கோவில் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மோதுவதை போல் வந்து, காரில் இருந்து இறங்கிய, 4 பேர், மயில்வேலிடம் கத்தியை காட்டி மிரட்டி, தாக்கினர்.தொடர்ந்து அவரிடமிருந்த, 3,000 ரூபாயை பறித்துச்சென்றனர். இதுகுறித்து மயில்வேல் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து, அஸ்தம்பட்டி, விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 43, ராஜேஷ்குமார், 43, பெரமனுார் பவித்ரன், 31, ஜாகீர் அம்மாபாளையம் சக்திவேல், 45, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்