உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பட்டப்பகலில் விவசாயி வீட்டில் 4 பவுன் திருட்டு

பட்டப்பகலில் விவசாயி வீட்டில் 4 பவுன் திருட்டு

அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம், பெரிய கவுண்டாபுரத்தை சேர்ந்த, விவசாயி செந்தில்குமார், 48. இவர் குடும்பத்துடன், மாசிநாயக்கன்பட்டியில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு நேற்று காலை, 9:00 மணிக்கு சென்றார். மதியம், 2:00 மணிக்கு திரும்பி வந்தனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்திருந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 4 பவுன் தங்க நகைகள், 50,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து செந்தில்குமார் புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ