மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் பலி
ஓமலுார்: ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்துார், பாவாடை செட்டியூரை சேர்ந்த, விவசாயி பரமசிவம், 67. இவர் நேற்று முன்தினம் மாலை, வீடு அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துள்ளார். நேற்று காலை பார்த்தபோது, மர்ம விலங்கு கடித்ததில், 4 ஆடுகள் இறந்து கிடந்தன. மேலும், 4 ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டிருந்தன.அவர் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின் கால்நடை மருத்துவர் வந்து, காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.