உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் /  தீ விபத்தில் சிக்கிய காரில் 400 கிலோ புகையிலை பறிமுதல்

 தீ விபத்தில் சிக்கிய காரில் 400 கிலோ புகையிலை பறிமுதல்

சூரமங்கலம்: தீ விபத்தில் சிக்கிய காரில் இருந்த 400 கிலோ புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். சேலம், கந்தம்பட்டி பைபாஸில், 'போக்ஸ்வேகன்' கார், நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, இன்ஜின் பகுதியில் தீப்பற்றியது. அதை ஓட்டி வந்தவர், அவருடன் வந்தவர், காரை சாலையோரம் நிறுத்தி இறங்கினர். அங்கிருந்த மக்கள், தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்த தகவலின்படி சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விசாரணையில், காரில் இருந்து இறங்கிய இருவரும் ஓட்டம் பிடித்தது தெரிந்தது. காரை சோதனை செய்தபோது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், 400 கிலோ, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அப்பொருட்களுடன் காரை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கார் மேற்கு வங்க மாநில பதிவெண் கொண்டதாக இருந்தது. விசாரணையில் அதுவும் போலி நம்பர் பிளேட் என தெரிந்தது. காரின் உரிமையாளர், புகையிலை கடத்தி வந்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை