உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 85 சதவீத படிவங்கள் ஒப்படைப்பு

85 சதவீத படிவங்கள் ஒப்படைப்பு

சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவம், வாக்காளர்களுக்கு வழங்கி, அதை பூர்த்தி செய்வதற்கு உதவிட, மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, ஊராட்சி அலுவலகங்களில் வாக்காளர் சிறப்பு உதவி மையங்கள் செயல்படுகின்றன. அதன்படி, 85 சதவீத கணக்கீட்டு படிவங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து உடனே, உங்கள் பகுதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்து, உங்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் - 2026ல் இடம்பெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒப்படைக்காத வாக்காளரின் பெயர் வரும், 16ல் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. கூடுதல் விபரம் பெற, 1950 என்ற உதவி மைய எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ