போலீஸ் எழுத்துத்தேர்வு 9,848 பேருக்கு அனுமதி
சேலம்:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், போலீஸ் துறையில், 2ம் நிலை போலீசார், 2ம் நிலை சிறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர் பணிக்கான எழுத்துத்தேர்வு, இன்று தமிழகம் முழுதும் நடக்கிறது. சேலம் மாநகரில், 4 மையங்களில் நடக்கிறது. 2,735 பேர் எழுதுகின்றனர். அதேபோல் மாவட்டத்தில், 7 மையங்களில், 7,113 பேர் பங்கேற்கின்றனர். காலை, 10:00 முதல், மதியம், 12:40 மணிவரை தேர்வு நடக்கிறது. 'சூப்பர் செக்' அதிகாரியான, கமிஷனர் அனில்குமார் கிரி தலைமையில், மாநகரில், 358 பேர், மாவட்டத்தில், 750 பேர், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.