உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் சாரதா கல்லூரி சாலையில் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சேலம் சாரதா கல்லூரி சாலையில் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சேலம் சாரதா கல்லூரி பிரதான சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அன்சர் சேலத்தில் மருத்துவ பரிசோதனைக்காக தனது மனைவி மற்றும் மகளுடன் காரில் சேலம் வந்தார் .ராமகிருஷ்ணா பார்க் அருகே உள்ள ஏனியார் மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு அவர்கள் 3 பேரும் ஐந்து ரோடு பகுதியில் உள்ள நட்சத்திர உணவக விடுதி செல்ல காரில் புறப்பட்டனர்அப்போது சாரதா கல்லூரி பிரதான சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென என்ஜின் பகுதியில் இருந்து புகை கிளம்பியது இதனால் அதிர்ச்சி அடைந்த அன்சர் மற்றும் மனைவி மகள் உடனடியாக காரை விட்டு இறங்கினர் அப்போது திடீரென கார் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயைஅணைக்க முயற்சி செய்தனர் இதனைத் தொடர்ந்து இது குறித்து செவ்வாய்பேட்டை தீயனைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் விருந்து சென்று எரிந்து கொண்டிருந்த காரின் மீது தண்ணீர் பீச்சு அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் கார் முழுவதும் எரிந்து எலும்பு கூடு போல காட்சியளித்தது சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயனைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இது குறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி காவல் துறையினர் விரைந்து வந்து காரில் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்ததா அல்லது இன்ஜின் பழுது ஏற்பட்டு தீ பிடித்ததா என்பது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்காரில் பயணம் செய்தவர்கள் உடனடியாக காரை விட்டு இறங்கியதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் உயிர் தப்பினர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ