உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராம்ராஜ் காட்டனின் புதிய முகம் அம்பாசிடராக நடிகர் ரிஷப் ெஷட்டி

ராம்ராஜ் காட்டனின் புதிய முகம் அம்பாசிடராக நடிகர் ரிஷப் ெஷட்டி

சேலம்: ராம்ராஜ் வேட்டிகள், சட்டைகள், குர்தாக்களின் புதிய பிராண்ட் அம்பாசிடராக, நடிகர் ரிஷப் ெஷட்டியை அறிமுகப்படுத்திய ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர், ராம்ராஜ் வேட்டிகளின் புதிய முகமாக ரிஷப் ெஷட்டியுடன் இணைந்ததில், தனது மகிழ்ச்சியையும் பெருமையையும் புதிய நம்பிக்கையையும் தெரிவித்தார்.'முதன் முதலாக நடிகர் ரிஷப் ெஷட்டி எங்கள் ராம்ராஜ் பிராண்டுடன் இணைந்திருப்பது எங்களுக்கு ஒரு பெரிய மரியாதையாகவும், பெருமைமிக்க தருணமாக அமைந்திருக்கிறது' என்ற அருண் ஈஸ்வர், இந்த இணைப்பு எங்கள் பிராண்டை அதிக உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று உணர்கிறோம். தென்னிந்திய மாநிலங்களை தாண்டி வட இந்தியாவிலும் விரிவடைந்து வருவதால், இந்த இணைப்பு எங்கள் பிராண்டிற்கு நிச்சயம் உதவும் என்றார்.நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வருக்கு, பதிலளித்த ரிஷப் ெஷட்டி, 'நான் எப்போதும் நாகராஜனை போற்றுகிறேன். அவருடைய சமூக பணிகளை நன்கு அறிவேன். அதனால் ராம்ராஜோடு இணையும்படி கேட்டதற்கு நேரடியாகவே ஓகே சொல்லிவிட்டேன். ராம்ராஜ் ஒரு பிராண்டாக சந்தையில் தோன்றியபோது, இதுவும் ஒரு பிராண்டாக பெரிதாக வளரும் என்று நினைத்தேன். இன்று, இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவரும் ராம்ராஜை இந்திய கலாசாரத்தின் அடையாளமாக பயன்படுத்துவதை நான் காண்கிறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ