உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் மீது பைக் மோதி விபத்து அ.தி.மு.க., பேரூர் செயலர் பலி

மொபட் மீது பைக் மோதி விபத்து அ.தி.மு.க., பேரூர் செயலர் பலி

ஆத்துார்: மொபட் மீது பைக் மோதிய விபத்தில், அ.தி.மு.க., பேரூர் செயலர் உயிரிழந்தார்.கெங்கவல்லி அருகே, செந்தாரப்பட்டி கிழக்கு சத்திர தெருவை சேர்ந்தவர் பழனிசாமி, 62. இவர், செந்தாரப்பட்டி அ.தி.மு.க., பேரூர் செயலராக இருந்தார். நேற்று மாலை, 4:00 மணிக்கு தம்மம்பட்டியில் இருந்து, செந்தாரப்பட்டி நோக்கி 'ேஹாண்டா - டியோ' மொபட்டில் சென்றார். செந்தாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சென்றபோது, 'பஜாஜ் - டிஸ்கவர்' பைக், மொபட் மீது மோதியது.இந்த விபத்தில் பழனிசாமி, பைக் ஓட்டி வந்த திருச்சி, நாகநல்லுாரை சேர்ந்த பிரவீன், 25, ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும், தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பழனிசாமி உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக பிரவீன், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி