உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நலவாரியம் கேட்டு விவசாய தொழிலாளர்கள் போர்க்கொடி

நலவாரியம் கேட்டு விவசாய தொழிலாளர்கள் போர்க்கொடி

சேலம்: சேலம் கோட்டை மைதானத்தில், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.மாவட்ட செயலர் தனகோட்டி தலைமை வகித்தார். இந்திய கம்யூ., மாவட்ட செயலர் மோகன், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:கடந்த, 1996ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த விவசாய தொழிலாளர் நலவாரியம், ஜெ., ஆட்சியில் கலைக்கப்பட்டது. மாறாக, உழவர் பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்பட்டதால், விவசாய தொழிலாளருக்கு பலன் கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் தொழிலாளர் நலவாரியம் அமைத்து, அதற்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்.சேலம் மாவட்டத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை கேட்டு மனு கொடுத்து நான்கு ஆண்டுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லை. மாநகரில் இருந்து, 8 கி.மீ., தொலைவுக்கு வீட்டுமனை வழங்கக்கூடாது என்ற விதியை தளர்த்தி, திருச்சியில் வீட்டுமனைகள் வழங்கப்பட்டது போல, அமைச்சர் நேருவின் அறிவுரையை ஏற்று, சேலத்திலும் அதேபோல, வீட்டுமனை வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு, 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதிய நிலுவையை உடனடியாக விடுவிக்க வேண்டும். இத்தகைய கோரிக்கையை வலியுறுத்தி பிப்.,16ல், நாடு தழுவிய அளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். சேலத்தில், 15 இடத்தில் மறியல் நடக்கிறது.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை