உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் மேட்டூரில் அ.தி.மு.க., வெற்றி பெறும்

50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் மேட்டூரில் அ.தி.மு.க., வெற்றி பெறும்

மேட்டூர்: பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய, 450 பேர், அ.தி.முக.,வில் இணையும் விழா, மேட்டூர் சட்டசபை தொகுதிக்-குட்பட்ட, கொளத்துார், கருங்கல்லுாரில், நேற்று நடந்தது. கொளத்துார் மேற்கு ஒன்றிய செயலர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசிய-தாவது:கொரோனா காலத்தில் கூட, அப்போதைய முதல்வர், இ.பி.எஸ்., மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக ரேஷன் கடை-களில் கார்டுதாரர்களுக்கு, 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்-கினார். ஆனால் பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் உதவித்-தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்து விட்டு, இரு ஆண்-டுக்கு பின்பே, தி.மு.க., அரசு வழங்குகிறது. மேட்டூர் தொகுதி அ.தி.மு.க.,வின் கோட்டை. அதனால் வரும் சட்டசபை தேர்-தலில், மேட்டூர் தொகுதியில், 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, 450 பேர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். பின், 48 மாற்றுதிறனாளிகள், 43 துாய்மை பணியாளர்களுக்கு தலா, 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, பாலவாடி வேலுச்-சாமி உள்ளிட்டோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ