உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அம்பாயிரம்மன் தேர் திருவிழா

அம்பாயிரம்மன் தேர் திருவிழா

தலைவாசல், தலைவாசல் அருகே, ஆறகளூர் மற்றும் பெரியேரி கிராம எல்லை யில், அம்பாயிரம்மன், அய்யனார் கோவில்கள் உள்ளன. அக்கோவில்களில், 28 ஆண்டுக்கு பின் கோவில் புனரமைப்பு பணி மேற்கொண்டு, கடந்த ஜூலை 23ல், சக்தி அழைத்தலுடன் தேர் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம், அம்பாயிரம்மன் தேர் திருவிழா நடந்தது.அப்போது, 30 அடி உயர தேரை, முக்கிய வீதிகள் வழியே ஏராளமான பக்தர்கள் இழுத்துச்சென்றனர். தொடர்ந்து, அய்யனார் சுவாமி தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று அம்பாயிரம்மன் சுவாமிக்கு அலகு குத்துதல், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை