உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவர்களுக்கான கலை அறிவியல் அறிவுத்திறன் போட்டி

சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவர்களுக்கான கலை அறிவியல் அறிவுத்திறன் போட்டி

சேலம் :நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில், சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவ மாணவிகளுக்கான, 'KIOT அறிவும் அறிவியலும் 2025' என்ற கலை அறிவியல் அறிவுத்திறன் போட்டி நடந்தது.பெயின்டிங், ரோபோட்ரிக்ஸ், எக்பெய்ன்டிங், திருக்குறள் ஒப்புவித்தல், ஒரிகாமி போன்ற பத்து விதமான போட்டி நடத்தப்பட்டது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த, 20 பள்ளிகளில் இருந்து, 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெற்ற, சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசு கோப்பை, மடிக்கணினி வழங்கப்பட்டது.இரண்டாம் இடம் பிடித்த, சேலம் குளுனி வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், ஒரு சிறந்த மாணவருக்கு சைனிங் ஸ்டார் விருது வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு, நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி அறக்கட்டளை சார்பில், ரூ.2 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருள் வழங்கப்பட்டது.விழாவில் நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி முதல்வர் விசாகவேல், சிறப்பாளர் மனோதத்துவ நிபுணர் பாபு ரங்கராஜன் ஆகியோர் பேசினர். கல்லுாரி அறக்கட்டளை நிறுவனர் மற்றும் செயல் தலைவர் சீனிவாசன், செயலாளர் குமார், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வெற்றி பெற்றவர்களை பாராட்டினர். இயக்குனர்கள், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி