உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்று விழிப்புணர்வு மாரத்தான்

இன்று விழிப்புணர்வு மாரத்தான்

மேட்டூர்: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னிட்டு, சேலம் மாவட்ட போலீஸ் துறை, போக்குவரத்து போலீசார் சார்பில், 8 கி.மீ., மாரத்தான் போட்டி, இன்று காலை, 7:00 மணிக்கு மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்குகிறது. 4 ரோடு, 3 ரோடு, புனித மரியன்னை சாலை, பஸ் ஸ்டாண்ட், மேட்டூர் அணை வலதுகரை வழியே சென்று மீண்டும் பள்ளி மைதானத்தில் நிறைவ-டைகிறது.இதில் பங்கேற்க, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உள்பட, 600க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடிப்-பவர்களுக்கு, எஸ்.பி., கவுதம் கோயல் பரிசு வழங்குகிறார். மற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதேபோல், ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளியில், இன்று காலை, 6:00 மணிக்கு மாரத்தான் போட்டி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை