உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பார் ஆக மாறிய சந்தை: போலீஸ் கண்காணிக்குமா?

பார் ஆக மாறிய சந்தை: போலீஸ் கண்காணிக்குமா?

இடைப்பாடி: கொங்கணாபுரம் பஸ் ஸ்டாண்டை ஒட்டி, டவுன் பஞ்சாயத்தின் வாரச்சந்தை உள்ளது. அங்கு சனிதோறும் சந்தை கூடுகிறது. 100க்கும் மேற்பட்டோர் கடைகள் அமைக்கின்றனர். சனி தவிர மற்ற நாட்களில், அங்கு மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் பகல் மட்டுமின்றி இரவிலும், சந்தை கடைகளை, 'குடி'மகன்கள், 'பார்' ஆக பயன்படுத்துகின்றனர். ஓட்டல், வீடுகளில் இருந்து கொண்டு உணவு எடுத்து வந்து, கூடவே மதுபாட்டில்களை வாங்கி வரும், 'குடி'மகன்கள், அங்-கேயே பாட்டில்களை உடைத்துவிடுகின்றனர். வாரத்தில், 6 நாட்கள், இந்த கடைகள் காலியாக உள்ளதால், 'குடி'மகன்கள், தங்குமிடமாகவே பயன்படுத்துகின்றனர். அவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் பை ஆங்காங்கே கிடக்கின்றன. கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் தான் சந்தை செயல்படுகிறது. ஆனாலும் போலீசார் கண்டுகொள்ளாததால், 'குடி' மகன்கள் அட்டகாசம் தொடர்வதாக, மக்கள் குற்றம்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை