| ADDED : பிப் 13, 2024 12:23 PM
சேலம்: அரசு பள்ளிகளில், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அடிப்படை மதிப்பீட்டு தேர்வு நேற்று தொடங்கியது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு பிப்., 12 முதல், 20 வரை மொழி ஆய்வகத்தில், அடிப்படை மதிப்பீட்டு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தன. இதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் ஹைடெக் கணினி ஆய்வகத்தில், மதிப்பீட்டு தேர்வு தொடங்கியது. ஒரே சமயத்தில், 20 மாணவர்கள் பங்கேற்கும் வகையில், ஆன்லைன் மூலம் மதிப்பீட்டு தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும், பிப்., 20க்குள் தேர்வை நடத்தி முடிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.