உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக் திருடியவர்ஓராண்டுக்கு பின் கைது

பைக் திருடியவர்ஓராண்டுக்கு பின் கைது

ஆத்துார்:நரசிங்கபுரம், சர்க்கார் உடையம்பட்டியை சேர்ந்தவர் குமார், 29. பி.இ., படித்த இவர், ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிகிறார். 2022 டிச., 22ல், ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, 'ஸ்பிளண்டர்' பைக்கை, காமராஜர் சாலையோரம் நிறுத்தினார். திரும்பி வந்தபோது பைக்கை காணவில்லை. அவர் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார், 'சிசிடிவி' கேமராவில் ஆய்வு செய்தபோது பைக்கை ஒருவர் திருடிச்சென்றது தெரிந்தது. விசாரணையில் பெரம்பலுார், மேரிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன், 48, என தெரிந்தது. அவரை, நேற்று, ஆத்துார் டவுன் போலீசார் கைது செய்து, பைக்கை மீட்டனர். அவர் மீது, பைக் திருட்டு தொடர்பாக, சேலம், பெரம்பலுார் மாவட்டங்களில், 6 வழக்குகள் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை