உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தண்டவாளத்தில் வாலிபர் சடலம்

தண்டவாளத்தில் வாலிபர் சடலம்

ஓமலுார் : ஓமலுார் ஒன்றியம், தேக்கம்பட்டி ஊராட்சி தே.கொல்லப்பட்டியை சேர்ந்த ஏழுமலை மகன் நவீன்குமார், 22. சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, நவீன்குமார் ஓமலுார் சென்று வருவதாக கூறி, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. அவரை தேடிய உறவினர்கள், நாலுகால் பாலம் உள்ள ரயில்வே தண்டவாளம் வழியாக, சேலத்திலிருந்து சென்னை செல்லும் பிரதான ரயில்வே பாலத்தின் வழியாக சென்றுள்ளனர்.அப்போது பாலத்தின் அருகே நவீன்குமார் சென்ற இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. இதை கண்ட உறவினர்கள் அவருக்கு போன் செய்துள்ளனர். அப்போது ரயில்வே பாதையில் போன் அடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அங்கு சென்று பார்த்துள்ளனர். நவீன்குமார் உடல் ரயில் தண்டவாளத்தில் கிடந்துள்ளது. சேலம் ரயில்வே போலீசார், நேற்று காலை அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நவீன்குமார் இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ