உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிராமணர் சங்க முப்பெரும் விழா

பிராமணர் சங்க முப்பெரும் விழா

சேலம்: சேலம் மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம், தில்லை நகர் கிளை சார்பில் முப்பெரும் விழா, 2ம் அக்ரஹாரத்தில் நேற்று நடந்தது. கிளை தலைவர் ராமு தலைமை வகித்தார். பொருளாளர் சிவசங்கரன், வரவு செலவு கணக்குகளை வாசித்தார்.இதையடுத்து தலைவர், நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு, முன்னாள் சங்க கிளை நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஏழை குடும்பத்துக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி தொகை வழங்கப்பட்டன.முன்னதாக சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பட்டைக்கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மலார், மாவட்ட தலைவர் சீனிவாசன், உப தலைவர் ரேணுகா, கிளை நிர்வாகிகள், மாவட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி