ஓமலுார் : ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி வாரச்சந்தை அருகே முத்துமுனியப்பன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். மதியம் எருதாட்டம் நடந்தது. 30க்கும் மேற்பட்ட காளைகளை அழைத்து வந்தனர். காளைகளுக்கு கட்டப்பட்டிருந்த கயிற்றை பிடித்தபடி, ஏராளமான இளைஞர்கள் வலம் வந்தனர். சிலர், பொம்மைகளை காட்டி காளைகளை கோபமூட்டினர். ஏராளமானோர் எருதாட்டத்தை கண்டுகளித்தனர். வண்டி வேடிக்கைமல்லுார் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இளைய ரகம், இளம் தென்றல் நண்பர்கள் குழு சார்பில் வண்டிவேடிக்கை நேற்று நடந்தது. விநாயகர், மாரியம்மன், அய்யப்பன், தேவர்கள், ராவணன், குறவன், குறத்தி ஆகிய வேடம் போட்டவர்கள், திருச்சி சாலை, வீரபாண்டி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியே ஊர்வலமாக வந்தனர். நெல், அரிசி வியாபாரிகள் சங்கம் சார்பில் அர்த்தநாரீஸ்வரர், சிவனடியார் அலங்காரத்தில் ஊர்வலம் நடந்தது. அதேபோல் ச.ஆ.பெரமனுார் மாரியம்மன் கோவில் திருவிழாவில், 2ம் நாளாக அலகு குத்தி வந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.அலகு குத்துதல் விழாபெத்தநாயக்கன்பாளையம் அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், 26 ஆண்டுகளுக்கு பின் தேர் வடிவமைத்து, சித்திரை தேர்த்திருவிழா, கடந்த ஏப்., 30ல் சக்தி அழைத்தலுடன் தொடங்கியது. நேற்று சுவாமிக்கு பொங்கல் வைத்தனர். தொடர்ந்து திரளான பக்தர்கள் அலகு குத்தி, பூங்கரகம் எடுத்து, தீச்சட்டி எடுத்து மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர். இன்று மதியம், 2:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.