சேலம்: சேலம் மாவட்ட பெண்களுக்கு, ஒரு மாத தொழில் முனைவோர் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதுகுறித்து இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன திட்ட அலுவலர் ஜெய்சங்கர் அறிக்கை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த, தொழில் முனைவோராக விருப்பம் உள்ள, 18 முதல், 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஒரு மாத இலவச பயிற்சி, சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லுாரியில் நடக்க உள்ளது. அதில் கழிவாக துாக்கி எறிய கூடிய வாழை மரத்திலிருந்து, வாழை மட்டை, வாழை நார் பிரித்து, மதிப்பு கூட்டுதல் மூலம் பூஜை கூடை, மேஜை விரிப்பு, பூந்தொட்டி, அலங்கார கைவினை பொருட்கள், ஹேண்ட் பேக், பைல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்கவும், தொழில் வாய்ப்பு, சந்தைப்படுத்தல், திட்ட அறிக்கை தயாரித்தல், மானிய திட்டங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சியை முடித்தவர்களுக்கு, மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்முகத்தேர்வு, டிச., 5(நாளை) காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. சேலம் மாவட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளோர், 88258 12528 என்ற எண்ணில், எஸ்.எம்.எஸ்., மூலம் பெயரை முன்பதிவு செய்து, விபரங்களை பெறலாம்.