உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.2.50 கோடி மோசடி 2 பேர் மீது வழக்கு

ரூ.2.50 கோடி மோசடி 2 பேர் மீது வழக்கு

சேலம், சங்ககிரியை சேர்ந்த கந்தசாமி, கடந்த ஜூலை, 8ல், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், 'குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி தருவதாக, போலி ஆவணங்களை தயாரித்து, நில உரிமையாளரின் கையெழுத்தை போலியாக போட்டு, 2.50 கோடி ரூபாயை முன்பணமாக பெற்று, நிலத்தை கிரயம் செய்து கொடுக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளது' என குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ராஜமாணிக்கம், பச்சமுத்து மீது, கடந்த, 25ல் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்