மேலும் செய்திகள்
தீபாவளியையொட்டி 50 'சிசிடிவி' பொருத்தம்
31-Oct-2024
சேலம் : திருச்செங்கோட்டை சேர்ந்தவர் பிரபாகரன், 34. வேலுார் அருகே பேரணாம்பட்டை சேர்ந்தவர் பிரகாஷ், 30. தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் விஜி, 34. பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 30. இவர்கள் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களது பக்கத்து அறையில் நாமக்கல்லை சேர்ந்த கண்ணன், 32, அடைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு கடந்த, 8ல் கண்ணனை, நாமக்கல் கோர்ட்டுக்கு போலீசார் அழைத்துச்செல்ல முயன்றனர். அப்போது, 4 கைதிகளும், 'கோர்ட்டுக்கு சென்று வரும்போது போதைப்பொருட்கள் வாங்கி வரவேண்டும்' என கூறினர்.அவர் வாங்கி வரவில்லை. இதில் ஆத்திரம் அடைந்த கைதிகள், 4 பேரும் கண்ணனை மிரட்டி, அவரது மனைவியின் மொபைல் எண், வீட்டு முகவரியை பெற்றனர். பின் அவர்கள், '4 பேரும் விரைவில் வெளியே செல்வோம். அப்போது உன் மனைவி, குடும்பத்தினரை கடத்துவோம்' என மிரட்டினர். அச்சமடைந்த கண்ணன், சிறை காவலர்களிடம் தெரிவித்தார்.அவர்கள், 4 கைதிகள் மீது, அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்படி கொலை முயற்சி, மிரட்டல் பிரிவுகளில், 4 பேர் மீதும் நேற்று வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே, 4 கைதிகளும், உறவினர்களை பார்க்க, 3 மாதங்கள் தடை விதித்து, சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டார்.
31-Oct-2024