காவலாளிக்கு மிரட்டல் 5 பேர் மீது வழக்கு
ஏற்காடு, ஏற்காடு, பட்டிப்பாடியை சேர்ந்தவர் வெள்ளையன். அதே கிராமத்தில் உள்ள சரஸ்வதி தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். அவர் ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனு:கடந்த, 19ல் தோட்டத்தில் கம்பி வேலி அமைத்துக்கொண்டிருந்தேன். அருகே உள்ள தோட்ட உரிமையாளர் சித்ரா மணவாளன், அவரது மகன் சிபிசக்கரவர்த்தி, மேலும், 3 பேர், 'நிலத்தை அளவீடு செய்யாமல் வேலி போடுகிறாய். வேலி போட நீ யார்' என கேட்டு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.இதையடுத்து போலீசார், சித்ரா மணவாளன், சிபி சக்கரவர்த்தி உள்பட, 5 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.