| ADDED : டிச 04, 2025 06:14 AM
சேலம்: சேலம், இரும்பாலை, பெத்தாம்பட்டியை சேர்ந்தவர் தேன்மொழி, 50. இவர்களது சகோதரர்கள் கவுதம், சிவகுமார், சகோதரி கோமதி. உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து, சந்தோஷ். இவர்களுக்கு பூர்வீக சொத்தாக, 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதை பாகப்பிரிவினை செய்வதில் பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.இந்நிலையில் கடந்த, 1ல் சந்தோஷ், மாரிமுத்து ஆகியோருக்கும், தேன்மொழி, கோமதிக்கும் இடையே பாகப்பிரிவினை செய்வதில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தகராறு ஏற்பட, ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். தேன்மொழி, கோமதி காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோமதி நேற்று முன்தினம் அளித்த புகார்படி, இரும்பாலை போலீசார், சந்தோஷ், மாரிமுத்து மீது வழக்குப்பதிந்தனர். அதேபோல் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து அளித்த புகார்படி, சிவகுமார், கோமதி, தேன்மொழி உள்பட, 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.