உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காப்புரிமை பாடலை ஒலிபரப்பிய உள்ளூர் டிவி நிர்வாகி மீது வழக்கு

காப்புரிமை பாடலை ஒலிபரப்பிய உள்ளூர் டிவி நிர்வாகி மீது வழக்கு

சேலம்: சேலம் மாவட்டம் ஓலைப்பட்டி, மானத்தாள் பகுதியை சேர்ந்-தவர் செல்வம், 37. 'ஐ ஹார்ஸ்' நிறுவனத்தில், மார்க்கெட்டிங் எக்-ஸிகியூடிவாக பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனு:எங்கள் நிறுவனம் சோனி மியுசிக் என்டர்டெயின்மென்ட் நிறுவ-னத்தில் ஒப்பந்தம் போடப்பட்டு, சில திரைப்பட பாடல்களின் ஆடியோ, வீடியோ பாடல்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளோம்.எங்கள் உரிமை பெற்ற பின்பே, எந்த நிறுவனமும், நாங்கள் பெற்ற காப்புரிமை பாடல்களை ஒலிபரப்ப முடியும். ஆனால் சேலம், மெய்யனுாரில் உள்ள, உள்ளூர், 'டிவி' நிறுவனம், காப்பு-ரிமை பெற்ற சில பாடல்களை எங்கள் அனுமதியின்றி, கடந்த அக்., 3ல் ஒலிபரப்பினர். இதனால் எங்கள் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட, 'டிவி' நிர்வாகி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதையடுத்து விசாரித்த போலீசார், சேகர் மீது நேற்று வழக்குப்-பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ