மேலும் செய்திகள்
தீர்த்தக்குட ஊர்வலம்: இன்று கும்பாபிேஷகம்
30-Apr-2025
ஆத்துார் :சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில், 48 ஆண்டுக்கு முன் தேர் திருவிழாவின்போது, கோஷ்டி பிரச்னை ஏற்பட்டது. பின் தேர் திருவிழா நடத்தப்படவில்லை. 6 ஆண்டுக்கு முன் புதிதாக தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. தொடர்ந்து கோவில் புனரமைப்பு பணி மேற்கொண்டனர். கடந்த ஏப்., 30ல், தேர் திருவிழா, கணபதி பூஜையுடன் தொடங்கியது. கடந்த, 9ல் சுவாமிக்கு கும்பாபி ேஷகம் நடந்தது. 21ல் சக்தி அழைத்தல் நடந்தது.நேற்று மதியம், 2:00 மணிக்கு, 35 அடி உயர தேரை, முக்கிய வீதிகள் வழியே ஏராளமானோர் இழுத்துச்சென்றனர். 48 ஆண்டுக்கு பின் நடந்த தேர் திருவிழாவால், அக்கிராமத்தை சேர்ந்தவர்கள், உறவினர்களை அதிகளவில் அழைத்து வந்தனர். மாலை, 6:00 மணிக்கு, தேர் கோவிலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மேலும் மத நல்லிணக்கத்தை போற்றும்படி, அதே ஊரை சேர்ந்த முஸ்லிம் சமுதாயத்தினர், தேர் வரும்போது பூஜை பொருட்களை கொடுத்து வழிபட்டனர். அவர்களுக்கு, ஊர் மக்கள் சார்பில் சால்வை அணிவித்து, சுவாமிக்கு பூஜை செய்த பொருட்களை வழங்கி மரியாதை செய்தனர்.துாக்கு தேர்கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி மகா மாரியம்மன், உலகாளியம்மன் கோவிலில், 8 ஆண்டுக்கு பின் நேற்று முன்தினம், 2 நாள் தேர் திருவிழா தொடங்கியது. அப்போது, 30 அடி உயரம் உள்ள, சக்கரம் இல்லாத தேரை, பக்தர்கள் தோளில் துாக்கி, 3 தெருக்களில் ஊர்வலமாக கொண்டு சென்று, எம்.ஜி.ஆர்., சிலை முன் வைத்தனர். நேற்று மதியம், மீண்டும் ஏராளமான பக்தர்கள், தேரை துாக்கி, மேலும் மூன்று வீதிகளில் சென்று, மாலை, 6:00 மணிக்கு கோவிலை அடைந்தனர். அங்கு ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
30-Apr-2025