மேலும் செய்திகள்
சேவல் சண்டை 10 பேர் கைது
21-Jul-2025
சேவல் சூதாட்டம் மூன்று பேர் கைது
04-Aug-2025
ஓமலுார், சேவன் சண்டை நடத்திய, மூன்று பேர் கைது செய்யப்பட்டு, 9 பைக், 5 சேவல்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.காடையாம்பட்டி தாலுகா, சிக்கலபட்டி காட்டுவளவு பகுதியில், சேவல் சண்டை நடத்துவதாக வந்த தகவல்படி, தீவட்டிப்பட்டி போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கூட்டமாக நின்று சேவல் சண்டை நடந்துள்ளது. போலீசாரை கண்டதும் பலர் பைக்குகளை விட்டுவிட்டு தப்பினர். அதில், தாரமங்கலம் மேட்டுமாரனுாரை சேர்ந்த பழனிசாமி, 33, காடையாம்பட்டி உம்பிளிக்கம்பட்டியை சேர்ந்த கோபி, 21, பண்ணப்பட்டியை சேர்ந்த முரளி, 29. ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். 9 பைக்குகள், ஐந்து சேவல், 1,150 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
21-Jul-2025
04-Aug-2025