உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதல்வர் கோப்பை போட்டி கல்லுாரி மாணவர்கள் ஆர்வம்

முதல்வர் கோப்பை போட்டி கல்லுாரி மாணவர்கள் ஆர்வம்

சேலம், சேலம் மாவட்டத்தில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, பள்ளி, கல்லுாரி, மக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என, 5 பிரிவுகளில், கடந்த, 26ல் தொடங்கி நடந்து வருகிறது. அதில் கல்லுாரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி, காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. 100, 200, 400, 800, 3,000 மீ., ஓட்டம், 100 மீ., தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.தவிர நீச்சல், இறகுப்பந்து, மேசைப்பந்து, கேரம், சதுரங்கம், வாலிபால், கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட், கபடி, சிலம்பம், கோ - கோ போட்டிகள், மற்ற இடங்களில் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் வீரர்கள், மண்டல போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை