உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரத்து அதிகரிப்பால் கொப்பரை விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் கொப்பரை விலை சரிவு

வீரபாண்டி : சேலம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 14,925 கிலோ கொப்பரையை கொண்டு வந்தனர். வழக்கமாக, 5,000 கிலோ வரை மட்டும் வரத்து இருந்த நிலையில், நேற்று இரு மடங்குக்கு மேல் அதிகரித்தது. கிலோ கொப்பரை, 70 முதல், 95 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 12.83 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தெரிவித்தார். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் குறைந்தபட்ச விலையில், 6 ரூபாய், அதிகபட்ச விலையில், 4 ரூபாய் குறைந்தது இதற்கு வரத்து அதிகரிப்பே காரணம் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !