உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிலிண்டர் வெடித்து ஓட்டு வீட்டில் தீ

சிலிண்டர் வெடித்து ஓட்டு வீட்டில் தீ

சேலம், சேலத்தில், காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், ஓட்டு வீடு எரிந்தது.சேலம் அரிசிபாளையம் சின்னப்பன் தெருவை சேர்ந்தவர் கார்த்தி, 37, தொழிலாளி, இவர் நேற்று வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பியுள்ளார். இவருக்கு டீ வைப்பதற்காக, உறவினர் அனுசுயா என்பவர் சமையல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது காஸ் கசிவு ஏற்பட்டு, அவரது புடவையில் தீப்பிடித்தது.அலறியடித்து வெளியே ஓடி வந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரது சேலையில் இருந்த தீயை அணைத்தனர். சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியது. ஓட்டு வீடு முழுவதும் தீ பரவி, உடை, சமையல் பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமானது.உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள், தீ பரவாமல் அணைத்தனர். பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை