உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உயர் ரத்த அழுத்தத்தில் விடுபட தினமும் உடற்பயிற்சி அவசியம்

உயர் ரத்த அழுத்தத்தில் விடுபட தினமும் உடற்பயிற்சி அவசியம்

சேலம் : சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பொது மருத்துவ துறை சார்பில், 'தீவிர ரத்த அழுத்தத்தால் ஏற்படும் உபாதை' தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. துறை தலைவர் சுரேஷ்கண்ணா வரவேற்றார்.உதவி பேராசிரியர் பழனிவேல் ராஜன் பேசியதாவது:உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியுமே தவிர, அதை குணப்படுத்த முடியாது. குணப்படுத்தக்கூடிய நோயும் கிடையாது. அதனால் ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளானவர், முறையாக மருந்து, மாத்திரையை உட்கொள்ள வேண்டும். சில நோயாளிகள் ரத்த அழுத்தம் குணமாகிவிட்டதாக கருதி மாத்திரை உட்கொள்வதை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். அதனால் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அழுத்தம் அதிகமாகி ஒரு கட்டத்தில் வெடித்து உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடுகிறது. இந்த பாதிப்பில் இருந்து விடுபட அன்றாட உடற்பயிற்சி அவசியம். அத்துடன் எண்ணெய் பலகாரம், உணவுகள் குறைவாக சாப்பிட வேண்டும். உணவில் கட்டுப்பாடு இருந்தால் அச்சப்பட வேண்டியதில்லை. குறிப்பாக மருத்துவர்கள் பரிந்துரைப்படி மருந்து, மாத்திரையை தவறாமல் எடுத்துக்கொண்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து வரும், 30ல் பணி ஓய்வு பெற உள்ள டீன் மணி, கண்காணிப்பாளர் தனபால் ஆகியோரை, துறை சார்பில் கவுரவித்து நினைவுப்பரிவு வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் ராஜேஷ், முதுகலை மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி