| ADDED : நவ 19, 2025 03:39 AM
சேலம், தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்ட அவசர செயற்குழு கூட்டம், அதன் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் சுபாசு தலைமை வகித்தார். அதில் மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன் பேசியதாவது: துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் நவ., 27ல் வருகிறது. அன்று, மத்திய மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், மரக்கன்று நடுதல், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு என தனித்தனியே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி கொண்டாட வேண்டும். சேலம் மாவட்டம் முழுதும் ஒவ்வொரு பகுதியில் குறைந்தபட்சம், இதுபோன்று 4 நிகழ்ச்சிகளை இரு மாதங்கள் நடத்தி கொண்டாட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, 2 மாதம் கொண்டாட தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், தொகுதி பார்வையாளர் சுகவனம், மாநகர செயலர் ரகுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.