உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உயிரியல் பூங்காவில் மான் முட்டி ஒப்பந்த ஊழியர் பலி

உயிரியல் பூங்காவில் மான் முட்டி ஒப்பந்த ஊழியர் பலி

சேலம்:சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு, 10க்கும் மேற்பட்ட புள்ளி மான், கடமான்கள் பராமரிக்கப்படுகின்றன. பராமரிப்பு பணியில் ஒப்பந்த வன ஊழியர்களான, நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை சேர்ந்த தமிழ்செல்வன், 29, சேலம், செட்டிச்சாவடியை சேர்ந்த முருகேசன், 46, ஈடுபட்டிருந்தனர்.இவர்கள் நேற்று காலை, 11:30 மணிக்கு, கோதுமை தவிடை வண்டியில் ஏற்றி, மான்கள் அடைக்கப்பட்ட பகுதிக்குள் சென்றனர். அப்போது, அங்கிருந்த கடமான், ஆக்ரோஷமாக தமிழ்செல்வனை முட்டித்தள்ளியது. மீண்டும் அடுத்தடுத்து முட்டியது. உடனிருந்த முருகேசன், அவரை காப்பாற்ற முயன்றார்.ஆனால் அவரையும் மான் முட்டியது. சுற்றுலா பயணியர் கூச்சலிட, வன ஊழியர்கள், இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். வழியில் தமிழ்செல்வன் இறந்தார். முருகேசன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை