உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

இடைப்பாடி:இடைப்பாடி, தாவாந்தெருவில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா கடந்த, 16ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18ல் சக்தி கரக ஊர்வலம், நேற்று முன்தினம் காளியம்மனின் திருக்கல்யாணம் நடந்தது.நேற்று தீ மிதி விழா நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர், எலுமிச்சை அலகு, முதுகில் அலகு குத்தி, பஸ், கார், ஆம்னி வேன் போன்ற வாகனங்களை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் பலர், நாக்கு அலகு குத்தியும், தங்கள் குழந்தைகளுடனும் தீ மிதித்தனர். விழா ஏற்பாடுகளை தாவாந்தெரு கோவில் நிர்வாகஸ்தர்கள் செய்திருந்தனர்.அதேபோல் வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த தீ மிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை