உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்

விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்

சேலம்: சேலம், அயோத்தியாபட்டணம் அருகில், தனியார் பஸ்சும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 25 பேர் படுகாயமடைந்தனர். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற தனியார் பஸ்சும், ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த மணல் லாரியும், நேற்று காலை நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில், பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த காஞ்சனா(56) என்பவர் பலியானார். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அனைவருக்கும் விரைந்து சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களை கேட்டுக் கொண்டனர். காயமடைந்தவர்கள் பட்டியலை, முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்று, நிவாரணம் பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் கூறினார். எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், வெங்கடாசலம், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மோகன், ஆர்.டி.ஓ., பிரசன்னராமசாமி, தாசில்தார் குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ