உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கண்டக்டரை தாக்கிய பெண் கணவர், மகனுடன் கைது

கண்டக்டரை தாக்கிய பெண் கணவர், மகனுடன் கைது

மேட்டூர்: கண்டக்டரை தாக்கிய பெண்ணையும், அவதூறாக பேசிய அவரது கணவர், மகன் ஆகியோரையும் கொளத்தூர் போலீஸார் கைது செய்தனர். மேட்டூர், கொளத்தூர் அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்தவர் மளிகை கடை உரிமையாளர் கோவிந்தன் (49), இவரது மனைவி சம்பு (43), தம்பதியரின் மகன் பூமிநாதன் (23). மேட்டூரில் இருந்து நேற்று காலை, மாதேஸ்வரன்மலைக்கு அரசு போக்குவரத்து கழக ஸ்பெஷல் பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் கோவிந்தன், சம்பு, பூமிநாதன் ஆகியோர் ஏறியுள்ளனர். பஸ் மூலக்காடு நிறுத்தத்தை தாண்டிய நிலையில், மூவரும் கோவிந்தபாடிக்கு டிக்கட் கேட்டுள்ளனர். கண்டக்டர் பிரான்சிஸ், பஸ் கோவிந்தபாடியில் நிற்காது எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக, கண்டக்டரிடம் தகராறு செய்துள்ளனர். கோவிந்தபாடி சென்றதும், பஸ்ஸை நிறுத்தி விட்டு டிரைவர், கண்டக்டர் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது பஸ்ஸை விட்டு இறங்கிய சம்பு குடும்பத்தினருக்கும், கண்டக்டருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், சம்பு கண்டக்டர் பிரான்சிஸை தாக்கியுள்ளார். கோவிந்தன், பூமிநாதன் இருவரும் கண்டக்டரை அவதூறாக பேசியுள்ளனர். இதுகுறித்து பிரான்சிஸ் கொளத்தூர் போலீஸில் புகார் செய்தார். எஸ்.ஐ., ஆனந்தவேலு வழக்கு பதிந்து கண்டக்டரை தாக்கிய சம்பு, அவரது கணவர் கோவிந்தன், மகன் பூமிநாதனை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை