குஜராத் மேளாவில் தீபாவளி விற்பனை; 20 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி
சேலம்: சேலம், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் குஜராத் மேளா தீபாவளி சிறப்பு விற்பனை, கடந்த, 2ல் தொடங்கியது. வரும், 31 வரை நடக்க உள்ளது.இதுகுறித்து குஜராத் மேளா நிர்வாகத்தினர் கூறியதாவது: குர்தீஸ், பாகல்பூர், ஆந்திரா, செட்டிநாடு கைத்தறி காட்டன் சேலை ரகங்கள் விற்பனை நடக்கிறது. தீபாவளி சிறப்பு விற்பனையில் பெண்களுக்கு பெங்கால் கைத்தறி சேலைகள், பனாரஸ், பேன்ஸி குர்தீஸ், லெகின்ஸ், காட்டன் பேன்ட்ஸ், பட்டியாலா சுடி, பேன்ட்ஸ், ஸ்கர்ட் மாடல், ஷால், ஸ்கர்ட், பர்முடாஸ், நைட் பேன்ட், ஜெய்பூர் மெத்தை விரிப்புகள், பெட்சீட், ஷோபா கவர், குஷன் தலையணை உரை, ஹைதராபாத் முத்து பவள மாலை, ராசி கற்கள், வளையல், குழந்தைகளுக்கு டி -சர்ட் ஆகியவை உள்ளன.சாரன்பூர் வுட்டன் வகைகளில் கண்ணாடி, சுவர் கடிகாரம், பூந்தொட்டி, கீ ஹேங்கர், ஜுவல்லரி பாக்ஸ், டிரே, டேபிள், நாற்காலி, டீப்பாய், பூஜை டேபிள், மணி பேக், வளையல் ஸ்டாண்ட் போன்றவையும் உள்ளன. பெண்கள், சிறுமியருக்கு துணி வகைகள், குர்தீஸ், செட்டிநாடு கைத்தறி காட்டன் சேலை ரகங்கள், ஆண்களுக்கு துணி வகைகள் உள்ளன. பெண்கள் பர்ஸ், ஹேண்ட் பேக்குகள் பல மாடல்களில் உள்ளன. தீபாவளி சிறப்பு விற்பனையில் சிறப்பு தள்ளுபடி, 10 முதல், 20 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.