உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லஷ்மியில் தீபாவளி இனிப்பு திருவிழா நாளை முதல் 5 நாட்கள் கொண்டாட்டம்

லஷ்மியில் தீபாவளி இனிப்பு திருவிழா நாளை முதல் 5 நாட்கள் கொண்டாட்டம்

சேலம்: லஷ்மியில் தீபாவளி இனிப்பு திருவிழா, நாளை முதல், 5 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.இதுகுறித்து லஷ்மி குழும இயக்குனர்கள் முத்துராஜா, குமார், பிரபு, வெங்கட்ராகவன் கூறியதாவது:கடந்த, 30 ஆண்டுகளாக, சேலம் மக்களின் நம்பிக்கையை பெற்ற லஷ்மி குழுமத்தின் இனிப்பு திருவிழா, அக்., 27(நாளை)ல் தொடங்கி, 31 வரை நடக்க உள்ளது. அதன்படி இந்த கொண்-டாட்டம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மற்றும் சோனா கல்-லுாரி எதிரே உள்ள லக்ஷ்மி ஓட்டல்ஸ், ஸ்வீட்ஸ் அண்ட் பேக்க-ரிகள், புது பஸ் ஸ்டாண்ட் எதிரே பிருந்தாவன் சாலையில் உள்ள லஷ்மி பிரகாஷ் ஓட்டல், ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி; செரி ரோட்டில் பேலஸ் தியேட்டர் எதிரே; அருணாசல ஆசாரி தெருவில் உள்ள லஷ்மி ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி; டி.வி.எஸ்., பெட்ரோல் பங்க் அருகே உள்ள லஷ்மி ஸ்வீட்ஸ் அண்ட் பேக்-கரி, பழமுதிர்ச்சோலை மற்றும் ஐஸ்கிரீம் ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்த ஆண்டு இனிப்பு திருவிழாவில் தினமும் புது-வகை இனிப்பு, கார வகைகளை அறிமுகப்படுத்துகிறோம்.தீபாவளி ஸ்பெஷலாக, இந்த ஆண்டு புது வரவாக அரேபியன் நாட்டு பக்லாவா ஸ்வீட்ஸ் வகைகளை அறிமுகப்படுத்துகிறோம். நீரிழிவு நோயாளிகளுக்கு சுகர்லஸ் ஸ்வீட்ஸ் ரகங்கள், சுகர்லஸ் லட்டு, சுகர்லஸ் பேடா, நோ சுகர் கசூர் ஆகியவை ஸ்பெஷலாக தயாரித்து வழங்குகிறோம். தீபாவளி கிப்ட் பாக்ஸாக ஸ்பெஷல் ஸ்வீட் பாக்ஸ், 400 கிராம், 210 ரூபாய், 800 கிராம், 420 ரூபாய், வி.ஐ.பி., ஸ்வீட் பாக்ஸ் அரை கிலோ, 320 ரூபாய், ஒரு கிலோ, 640 ரூபாய்க்கு கிடைக்கும். மேலும் லஷ்மி ஸ்பெஷல், வி.ஐ.பி., ஸ்வீட் கிடைக்கும். ஸ்வீட் வகைகள், 260 முதல், 1,150 ரூபாய் வரை உள்ளது. கார வகைகள், 280 முதல், 480 ரூபாய் வரை உள்-ளது. ஸ்வீட் கொண்டாட்டம் நடக்கும் காலங்களில் தினமும் புதுப்புது ஸ்வீட்டை அறிமுகப்படுத்துகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை