உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மத்திய அரசை கண்டித்து தி.மு.க., தீர்மானம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., தீர்மானம்

வாழப்பாடி: வாழப்பாடியில் உள்ள, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் அதன் பொது உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் நேரு தலைமை வகித்தார்.அதில், செப்., 17ல் பவள விழா நிறைவை கொண்டாட, அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்து சுவர் விளம்பரம், தெருமுனை கூட்டம், கொடியேற்றுதல், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தல்; 100 ரூபாய் மதிப்பில், தலைவர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியிட முன்வந்தமைக்கு நன்றி தெரிவித்தல்; நிதி வழங்காமல் பாரபட்சம் காட்டுவதையும், தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசை, மாவட்ட கட்சி சார்பில் கண்டித்தல்; கருணாநிதி நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடிய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மாவட்ட செயலர் சிவலிங்கம், எம்.பி.,க்கள் செல்வகணபதி, மலையரசன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை