உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்கள் திட்டங்களில் முதன்மை வகிக்கும் தி.மு.க.,: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர் பேச்சு

மக்கள் திட்டங்களில் முதன்மை வகிக்கும் தி.மு.க.,: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர் பேச்சு

ஆத்துார் : ''மக்களுக்கு திட்டங்களை செய்வதில், தி.மு.க., முதன்மை வகிப்பதால் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரி மாநிலமாக தமிழகம் உள்ளது,'' என, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மலையரசன் பேசினார்.கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மலையரசன் நேற்று, நரசிங்கபுரம், ஆத்துார் நகர் பகுதிகளில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது மலையரசன் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் மக்களை தேடி, வீடு தேடி திட்டங்கள் வருகின்றன. சொத்தில் மகளிருக்கு சம உரிமை, விவசாய கடன் தள்ளுபடி, '108' அவசரகால ஆம்புலன்ஸ் திட்டங்கள், தி.மு.க., ஆட்சியில் தான் செயல்படுத்தப்பட்டுள்ளன. புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதுபோல் அமைச்சர் உதயநிதி, தமிழகம் முழுதும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க., ஆட்சியில் ஆத்துார், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு திட்டங்களை செய்வதில், தி.மு.க., முதன்மை வகிப்பதால், மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரி மாநிலமாக தமிழகம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதில் தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், பொருளாளர் ஸ்ரீராம், துணை செயலர் சின்னதுரை, அவைத்தலைவர் கருணாநிதி, நரசிங்கபுரம் நகராட்சி தலைவர் அலெக்சாண்டர், நகர செயலர் வேல்முருகன், காங்., மாவட்ட தலைவர் அர்த்தனாரி, ம.தி.மு.க., மாவட்ட செயலர் கோபால்ராசு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை